துபாயில் 43 வருடமாக லீவே எடுக்காமல் பணியாற்றிய போலீஸ் அதிகாரியை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை கவுரப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ராஸ் அல் கைமா பகுதி போலிஸில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அப்துல்ரஹ்மான் ஒபைத் அல் துனாஜி. இவர் 43 வருடங்களாக ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் பணியாற்றியுள்ளார்.
இதற்காக அவரை, ராஸ் அல் கைமா காவல்துறை கவுரவப்படுத்தியுள்ளது. காவல்துறை மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுயாமி கூறும் போது, லீவே எடுக்காமல் 43 வருடமாக இந்த அதிகாரி பணியாற்றி இருப்பது அவரது அர்ப்பணிப்பை காட்டுகிறது. அவர், மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருப்பார்’ என்றார். அவரது கடமையாலும் அர்ப்பணிப்பாலும் அவரது துறையின் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘’நான் எனது கடமையைதான் செய்தேன். இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என்கிறார் அந்த கடமை தவறாத காவல் அதிகாரி துனாஜி.