இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு இந்தியா தன்னிச்சையாக உதவிகளை வழங்கியதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ’இலங்கையில் நடைபெற்ற யுத்தமானது, இந்தியாவிற்கு எதிரான யுத்தமாகவே காணப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான யுத்த முடிவிற்கு, அனைத்துவித உதவிகளையும் இந்தியா வழங்கியிருந்தது. சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கின’ என அவர் தெரிவித்தார். விடுதலைபுலிகளுக்கும், இலங்கை அரசுக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் கடந்த 2009ம் ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை அதிபராக பதவிவகித்தவர் ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.