இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சீனாவின் நிதி உதவியுடன் ராஜபக்ச ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மாத்தளை சர்வதேச விமான நிலையத்தை இந்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹம்பாந்தோட்டையில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ராஜபக்சவின் மூத்த மகனும், எம்பியுமான நாமல் ராஜபக்ச உள்பட எம்பிக்கள் 6 பேரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது வருகின்ற 16ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.