உலகம்

பழங்குடியினரை புறக்கணிக்கிறது பாஜக -- ராகுல் குற்றச்சாட்டு

பழங்குடியினரை புறக்கணிக்கிறது பாஜக -- ராகுல் குற்றச்சாட்டு

webteam

பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மையினரை மோடி அரசு புறக்கணிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் சர்வதேச மாணவர்களிடையே ராகுல்காந்தி உரையாற்றினார். அதில், ஒரு பிரிவு மக்களை புறக்கணிப்பது மிகவும் அபாயகரமானது என்று தெரிவித்தார். வளர்ச்சிப் பாதையில் இருந்து மக்களை புறக்கணிப்பது கிளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் சிறுதொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். சிறுதொழில் பாதிப்பு, வேலையின்மை உள்ளிட்டவையே கும்பல்களின் வன்முறை தாக்குதல்களுக்கு காரணம் என்று குறிப்பிட்டார்.
 
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகமான வன்முறை நிகழ்வதாக கூறிய ராகுல்காந்தி, பெண்கள் சமமானவர்கள் என்று கருதி மரியாதை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டித்தழுவியதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, பிரதமர் தன் மீது வெறுப்பை காட்டினாலும் தான் அன்பை வெளிப்படுத்தியாக கூறினார். தந்தை ராஜீவ்காந்தி, பாட்டி இந்திரா காந்தி கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அவர், வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். அவற்றில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகருவதற்கு மன்னிப்பதே சிறந்த வழி என்றும் ராகுல் தெரிவித்தார்.