உலகம்

"இனவாதம் சரியானது அல்ல" இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் !

PT

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட விவகாரம் குறித்து இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அவரது  கருத்தை முன்வைத்துள்ளார்.

உலகிலேயே மிகவும் வசதியான நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை காவல் அதிகாரி ஒருவரின் காலால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு உலகம் முழுவதும் கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்நிலையில் தற்போது இந்தச்சம்பவம் குறித்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் அவரது கருத்தை முன்வைத்துள்ளார்.

அவர் கூறும் போது “ கொலைச் சம்பவத்திற்கு எதிராக மக்கள் திரண்டு போராடுவதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரசிகர் ஒருவரால் நானும் இனவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். ஏதாவது ஒரு விஷயம் என்னை பாதிக்கும்போது ஒரு தனிமனிதனாக என்னுடைய கருத்துகளை நான் வெளிப்படையாக பேசிவிடுவேன். கொலைச்சம்பவத்தில் என்னுடைய பார்வை என்னவென்றால் இது போன்ற விஷயங்களை நீங்கள் மூடி வைக்கக் கூடாது. ஏனெனில் இனவாதம் சரியானது அல்ல” என்று அவர் பேசியுள்ளார்.