உலகம்

கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்: தூதரகம் அறிவிப்பு

கத்தாரில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்: தூதரகம் அறிவிப்பு

webteam

கத்தார் நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான உதவி எண்களை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தோஹாவில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தை 50536234, 55512810, 55532367, 66013225 என்ற எண்களிலும், labour.doha@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் சூழல் குறித்து வதந்திகள் வெளியாவதாகவும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது. உதவி எதுவும் தேவைப்பட்டால் தோஹாவில் உள்ள தூதரக அலுவலகத்தை அணுகலாம் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..