உலகம்

விசா இல்லாமல் கத்தார் செல்லலாம்

விசா இல்லாமல் கத்தார் செல்லலாம்

webteam

இந்தியா உட்பட 80 நாடுகளில் இருந்து விசா இல்லாமலேயே கத்தார் செல்வதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

வளைகுடா நாடுகளுள் ஒன்றான கத்தார் மீது சவுதி அரேபியா தலைமையிலான பிற அரபு நாடுகள் தடை விதித்திருந்தன. அண்டை நாடுகளின் தடையால் பெருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க கத்தார் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

கத்தார் விமான சேவையை அதிகரிக்கவும், அந்நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கவும் இந்தியா உட்பட 80 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள், இந்தியா, லெபனான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்கள் தனியாக விசா வாங்கத் தேவையில்லை. அந்த நாட்டு விமானநிலையத்தில் இறங்கியவுடன் Visa on Arrival முறையில் அங்கேயே விசா வழங்கப்படும்.

அந்நாட்டின் தலைநகர் தோஹாவில் செய்தியாளர்களை சந்தித்த கத்தார் சுற்றுலா வளர்ச்சித்துறை தலைமை அதிகாரி ஹஸன் அல்-இப்ராஹிம், விசா நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளதன் மூலம் கத்தார் அரபு நாடுகளுள் மிகவும் சுதந்திரமான, அனைவரும் அணுகக்கூடிய நாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை சோக்கர் விளையாட்டு போட்டிகள் கத்தாரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.