உலகம்

”திட்டமிட்டு வீடியோக்களை பரப்புகிறார்கள்”.. LGBTQ தடை சட்டம் இயற்றிய விளாதிமிர் புதின்!

Abinaya

பொது இடங்கள், இணையதளம், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் விளம்பரங்களில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் அல்லது அதை பற்றின பிரசாரங்கள் செய்வது போன்ற எந்தவொரு செயலும் அல்லது எந்தவொரு தகவலையும் பரப்புவதற்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் LGBTQ பிரசாரத்தை தடை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

குழந்தைகளிடம் தன்பாலின சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை தடை செய்த ரஷ்யாவின் முந்தைய சட்டத்தை இந்த சட்டம் மேலும் விரிவுபடுத்தி கடுமையாகி உள்ளது.

2013ல் பிறப்பிக்கப்பட்ட முந்தைய சட்டமானது, சிறார்களுக்கு LGBTQ தொடர்பான தகவல்களைப் பரப்புவதைத் தடை செய்தது. தற்போதைய புதிய சட்டமானது, பெரியவர்களுக்கும் இதுகுறித்த தகவல்களை விளக்கப்படுத்துவதற்கான வழியை தடை செய்துள்ளது. LGBTQ உறவுகளை ஊக்குவிப்பது , புகழ்வது, விழிப்புணர்வு கொடுப்பது அனைத்தும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுபக்கம், உக்ரேனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை பலவீனமடைந்து வருவதால், அதை திசை திரும்பும் வகையில் பேச்சு சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை அனைத்தும் ஒடுக்கப்படுவதாக ரஷ்யா மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ரஷ்ய அரசு சிறுபான்மை குழுக்கள் மற்றும் உள்நாட்டில் அதிபர் புடினை எதிர்ப்பவர்கள் மீது அதிக அழுத்தத்தை கொடுத்து, சுதந்திர ஊடகங்களை முடக்கி வருகிறது.

லெஸ்பியன்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினம் மற்றும் திருநங்கைகள் ஆகியோரால் நடைமுறைப்படுத்தப்படும் LGBT வாழ்க்கை முறைகள் பாரம்பரியமற்றது எனவே பொது வாழ்வில் இருந்து முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும் என்ற புடினின் புதிய சட்டம் என்று மனித உரிமை என கண்டனங்கள் எழுந்து வருகிறது.

சில தினங்கள் முன்பு ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கான அங்கீகாரத்தை உறுதி செய்ய அமெரிக்க செனட் சபை மசோதாவை நிறைவேற்றியது. மேலும், நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் யாரை விரும்புனாலும்.. அன்பு. அன்பு தான் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டு வரும் ரஷ்யா, மனித உணர்வுகள் மீது அத்துமீறல்களை கட்டவிழித்துள்ளது. LGBTQ தடை என்பது மனித உரிமை மீறல் என்பதை தாண்டி இயற்கை, அறிவியல், முற்போக்கான எதிர்காலம்  என அனைத்திற்கு எதிரானது என்பதை ரஷ்யா போன்ற நாடுகள் விரைவில் புரிந்துகொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.