உலகம்

அமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் - புதின்

அமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் - புதின்

webteam

சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹேக்கர்கள் தலையிட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

பிரபல ஏபிசி தொலைகாட்சிக்காக பத்திரிக்கையாளர் மெகின் மெல்லி ரஷ்ய அதிபர் புதினை பேட்டி கண்டார். அதில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய ஹேக்கர்களின் பங்கு அதிகம் என்ற குற்றச்சாட்டு தொடர்பான கேள்வி புதினிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த புதின், ஹேக்கர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறார்கள் என்றும், அதுகுறித்து யோசிக்காமல் அமெரிக்க அரசு எதற்கு எடுத்தாலும் ரஷ்யாவை கைகாட்டுவதேயே வாடிக்கையாக கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் அதிபர் தேர்தலில் ஹேக்கர்களின் தலையீடு இருந்திருக்கலாம் என்றும் புதின் தெரிவித்தார்.