உலகம்

அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறித்து முடிவெடுக்கவில்லை: விளாடிமிர் புதின்

அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறித்து முடிவெடுக்கவில்லை: விளாடிமிர் புதின்

webteam

அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சைரஸ் பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அதிபர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த புதின், அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என்று கூறினார். பிடித்தமான பொழுதுபோக்கு குறித்த கேள்விக்கு, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, வரலாற்று புத்தகங்களைப் படிப்பது, இசை மற்றும் விளையாட்டில் ஈடுபடுவது போன்றவை தமக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என்று பதிலளித்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவர்கள், புதின் அதிபரான பின்னர் பிறந்தவர்கள். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக புதின் பதவி வகித்து வருகிறார். ரஷ்ய அதிபருக்கான தேர்தல் 2018 மார்ச்சில் நடைபெற இருக்கும் நிலையில், அரசில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் மாஸ்கோ நகர வீதிகளில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.