உலகம்

ரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய அதிபர் புதின்

ரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய அதிபர் புதின்

webteam

ரஷ்ய அதிபர் புதின் அல்தாய் மலைகளில் உள்ள மான்களின் ரத்தத்தில் குளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்தாய் மலைப் பகுதி மக்கள் அங்கு காணப்படும் மாரல் வகை மான்களின் கொம்புகளை வெட்டி அதன் ரத்தத்தை வடிகட்டி அதனை குளியல் தொட்டியில் ஊற்றி குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாரல் மான்கள் என கூறப்படும் சிவப்பு மான்களின் கொம்புகளில் பாலியல் உணர்வுகளை அதிகரிக்கும் இயற்கை மருந்துகள் இருக்கிறதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவரான அலெக்ஸாண்டர் சூய்கோவின் ஆலோசனையின் பேரில் புதின், மான்களின் ரத்தத்தில் குளிப்பது தெரியவந்துள்ளது. 64 வயதான புதினுக்கு மருத்துவ நலன்களில் அதிக ஆர்வம் என கூறப்படுகிறது. ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெத்வதேவும் ரத்தக் குளியலை மேற்கொள்வாராம்.

மான் ரத்தத்தில் குளிப்பதால் உடல் எலும்புகள், தசைகள், பற்கள் மற்றும் கண் பார்வை கோளாறுகள் குணமாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஆஸ்துமா, மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் முதுகுத்தண்டில் உள்ள பிரச்னைகள் கூட குணமாகும் எனக் கூறப்படுகிறது. முதலில் சிவப்பு மான்களின் கொம்புகளில் உள்ள ரத்தம் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு கொதிக்க வைக்கப்படுகிறது. பிறகு குளியல் தொட்டிகளில் ரத்தம் ஊற்றப்படுகிறது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மிருக ஆர்வலர்கள் விலங்குகளை துன்புறுத்துவதே குற்றம். அதனை வேட்டையாடி, அதன் ரத்தத்தில் குளிப்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என கருத்து தெரிவித்துள்ளனர்.