உலகம்

சொத்துக் குவிப்பு வழக்கு: நவாஸ் ஷெரிப்பிற்கு நெருக்கடி

சொத்துக் குவிப்பு வழக்கு: நவாஸ் ஷெரிப்பிற்கு நெருக்கடி

webteam

வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகள் கேட்டுள்ளது. கூட்டு விசாரணைக் குழு அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 

லண்டன், துபாய், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் சொத்துக்களை வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று ஷெரிப்பின் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குற்றச்சாட்டு தொடர்பாக சாதாரண கேள்விகளுக்குக் கூட பிரதமர் தரப்பில் இருந்து இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கூறினர். 
1990களில் பிரதமராக இருந்தபோது ஷெரிப்பும், அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துக்குவித்ததாக பனாமா பேப்பர்ஸ் கூறியுள்ளது. இதன்பேரில் அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக் குழு, ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது. இதனால், ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் நெருக்கடி அளித்து வருகின்றன.