உக்ரைனுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் நடுநிலை வகிப்பது, நேட்டோவில் சேரும் திட்டத்தை உக்ரைன் கைவிடுவது ஆகிய பிரதான அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் குறைந்துள்ளதாக ரஷ்ய தரப்பு பிரதிநிதி விளாடிமீர் மெடின்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ராணுவ மயமாக்கலில் இருந்து விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் பாதி உளவு தூரத்தை கடந்துவிட்டதாகவும் மெடின்ஸ்கி கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின் ரஷ்ய - உக்ரைன் அதிபர்கள் சந்திப்பதற்கான சூழ்நிலையும் ஏற்படும் என்றும் மெடின்ஸ்கி கூறியுள்ளார்.