உலகம்

நியூசிலாந்து அமைச்சரவையில் ஒலித்த மலையாளம் - வைரலாகும் வீடியோ..!

Sinekadhara

நியூசிலாந்தில் இரண்டாவது முறையாக எம்.பியாக தேர்வாகியுள்ள பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சரவையில் மலையாளத்தில் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன்(41), சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்தவர். நியூசிலாந்து நாட்டிற்கு குடிபுகுந்த இவர் அங்கு தனது கல்லூரிப் படிப்பை முடித்து ஆக்லாந்தில் இந்திய மக்களிடையே சமூக சேவகராக செயல்பட்டு வந்தார்.

2006ஆம் ஆண்டு நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், 2014ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் 2017இல் போட்டியிட்டு எம்.பி ஆனார்.

தற்போது அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். அவர் 3 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்து அமைச்சரவையில் மலையாளத்தில் பேசிய வீடியோ ஒன்றை இந்தியாவின் மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தற்போது பகிர்ந்துள்ளார்.

இந்திய நாட்டை பெருமைப்படுத்தும் விதமாக, இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அமைச்சர் நியூசிலாந்து அமைச்சரவையில் மலையாளத்தில் பேசியுள்ளார் என்று அவர் குறிப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.