உலகம்

பிரிட்டன் இளவரசி டயானாவின் பொருட்கள் ஏலம்

பிரிட்டன் இளவரசி டயானாவின் பொருட்கள் ஏலம்

webteam

மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலத்துக்கு வருகின்றன.

இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ஆடைகள், நகைகள், புகைப்படங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. பாஸ்டன் நகரைச் சேர்ந்த ஆர்ஆர் ஏல நிறுவனம் டயானாவின் பொருட்களை ஏலம் விடுகிறது. மறைந்து 20 ஆண்டுகள் கடந்த பிறகும், உலகம் முழுவதும் டயானாவின் புகழ் நீடிப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா. கருத்து வேறுபாடு காரணமாக 1996ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார். பின்னர் 1997ம் ஆண்டு பாரிஸ் நகரில் புகைப்படக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் போது அதிவேகமாக சென்ற கார் விபத்திற்குள்ளானதில் டயானா மரணமடைந்தார்.