பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் கடந்த 9ஆம் தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து பிரிட்டன் முழுவதும் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
இந்தநிலையில் அவரது உடல் வின்சர் கோட்டையில் இருந்து ஊர்வலமாக தேவாலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பிலிப் தான் விரும்பியபடி மாற்றி வடிவமைத்த லேண்ட் ரோவர் காரில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்ததும், தேவாலயத்தின் அடியில் உள்ள கல்லறைப் பகுதியான ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இறுதிச் சடங்கில் 30 பேர் மட்டுமே பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.