பிரிட்டன் இளவரசி மேகன் மார்கல் கருத்தரித்திருப்பதாக அந்நாட்டு அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹேரி, அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான மேகன் மார்கில்லை கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் விண்ட்சோர் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. வின்ஸ்சரில் தான் தங்களது திருமணம் நடக்க வேண்டும் என ஹேரியும், மார்க்லேவும் விரும்பியதாகவும், அது அவர்களுக்கு சிறப்பு வாய்ந்த இடம் என்றும் அரண்மனை தெரிவித்தாலும் அவர்களது திருமணம் அங்கு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசத்தம்பதியின் திருமணம் முடிந்து 5 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இங்கிலாந்து அரண்மனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் ''பிரிட்டன் இளவரசி மேகன் மார்கல் கருத்தரித்திருக்கிறார். அடுத்த ஆண்டு முதற்பாதியில் குழந்தை பெற்றெடுப்பார்'' என்றும் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தியை அந்நாட்டு மக்கள் பலரும் வாழ்த்துகளுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இளவரசர் ஹேரி - மேகன் மார்கல் ஜோடி 16 நாட்கள் சுற்றுப்பயணத்துக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் இந்தச் செய்தியை இங்கிலாந்து அரண்மனை வெளியிட்டுள்ளது.