உலகம்

சார்லஸ் - டயானாவின் திருமண நிகழ்வில் வெட்டப்பட்ட கேக் பீஸ் ரூ.1.9 லட்சத்துக்கு விற்பனை

EllusamyKarthik

இங்கிலாந்து நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சார்லஸ் - இளவரசி டயானாவின் திருமண நிகழ்வில் வெட்டப்பட்ட கேக் பீஸ் 1.9 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. புதன் அன்று நடைபெற்ற ஏலத்தில் இந்த கேக் பீஸ் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. 

இந்த தம்பதியினருக்கு 40 வருடங்களுக்கு முன்னர் 1981-இல் திருமணம் நடைபெற்றது. அப்போது 23 கேக்குகள் வெட்டப்பட்டுள்ளன. அந்த 23-இல் ஒன்று தான் இந்த கேக் பீஸ். மிகவும் பத்திரமாக பதப்படுத்தப்பட்டு தற்போது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதை ஏலத்தில் எடுத்தவர் இதனை நிதி திரட்டி, அதனை ஆதர்வற்றவர்களின் தேவைகளுக்கு உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார். 

11 ஆண்டுகளில் இந்த தம்பதியினர் மண வாழ்க்கையிலிருந்து பிரிந்தனர். 1996 வாக்கில் விவாகரத்து நடைபெற்றது. 1997-இல் இளவரசி டயானா கார் விபத்தில் உயிரிழந்தார். இவர்களுக்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர்.