உலகம்

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்: பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

EllusamyKarthik

உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள உலக தலைவர்கள் தரவரிசை தொடர்பாக வெளியான பட்டியலில் 71 சதவீத ஆதரவு பெற்று மோடி முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 66 சதவீத ஆதரவு பெற்று இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதில் 43 சதவீத ஆதரவை பெற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவீத ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். 

ஜனவரி 13 முதல் 19 வரையில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளதாக மார்னிங் கன்சல்ட்  தெரிவித்துள்ளது. 

இந்த கருத்துக் கணிப்பில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்ட இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் இந்தியா சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் இந்தியா தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 

 

கடந்த 2020 மே மாதம் பிரதமர் மோடி 84 சதவீத ஆதரவை பெற்றிருந்தார். 2021 மே மாதத்தில் 63 சதவீதமாக சரிந்த ஆதரவு தற்போது 71 சதவீதமாக உள்ளது எனவும் மார்னிங் கன்சல்ட்  தெரிவித்துள்ளது.