உலகம்

தென்கொரிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

JustinDurai

தென்கொரிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற யூன் சுக் யீயோலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரும், கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவருமான யூன் சுக் யீயோல் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் வேட்பாளர் லீ ஜே மையங் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, யூன் சுக்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதிபராக வரும் மே மாதம் பதவியேற்கவுள்ள யூன் சுக்குக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அமெரிக்க அதிபரை தொடர்ந்து, ட்விட்டரில் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை மேலும் விரிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யூன் சுக் ஆட்சியில் எதிர்நோக்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 100 அடி நீளம், 26 சக்கரங்கள், நீச்சல் குள வசதி! - மிரள வைக்கும் 'அமெரிக்கன் டிரீம் கார்'