5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா fb
உலகம்

பிரதமர் மோடியின் சீனப் பயணம் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு? 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும்..

5 வருட இடைவெளிக்குப் பிறகு சீனா மற்றும் இந்தியா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

திவ்யா தங்கராஜ்

5 வருட இடைவெளிக்குப் பிறகு சீனா மற்றும் இந்தியா இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இது நடக்கும்பட்சத்தில், வர்த்தகம், சுற்றுலா துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நடக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

COVID-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா மற்றும் சீனா நேரடி வணிக விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்போதிருந்து, பயணிகள் ஹாங்காங், சிங்கப்பூர் அல்லது பாங்காக் போன்ற பிராந்திய மையங்கள் வழியாக பயணிக்க வேண்டியிருந்தது. இதனால் பயண நேரம் மற்றும் செலவுகள் கணிசமாக அதிகரித்தன.

modi, xi jinping

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சீனாவிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, Shanghai Cooperation Organisation (SCO) summit-ல் கலந்து கொள்வதற்காக ஆகஸ்ட் 28 ஆம் தேதி சீனாவின் தியான்ஜினுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஒரு பிராந்திய அமைப்பான SCO, சீனா, ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் போன்ற பெரிய வல்லரசுகளை உள்ளடக்கியது.

பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது இருதரப்பு சந்திப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டு லடாக்கில் ஏற்பட்ட எல்லை மோதல்களுக்குப் பிறகு இருதரப்பினர் இடையே பல ஆண்டுகளாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி இருவரும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பல வருட தடைகளுக்குப் பிறகு, இந்தியா சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கியது.

xi jinping, modi

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முந்தைய ஒப்பந்தங்கள் முடங்கின. இருப்பினும், கடந்த பதினைந்து நாட்களில் இந்தியா மற்றும் சீனா இடையிலான பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே மீண்டும் இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவைகள் தொடங்கப்படுமா என்ற கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.