உலகம்

பாகிஸ்தான் ராணுவம் கொடுக்கும் நெருக்கடி - என்ன செய்யப்போகிறார் இம்ரான் கான்?

கலிலுல்லா

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு நெருக்கடி முற்றி வரும் நிலையில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என ராணுவம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி பிரதமர் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக அக்கட்சிகள் அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தான் ராணுவ தளபதி QAMAR JAVED BAJWA மற்றும் பிற மூத்த ராணுவ அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் , இதனை அடுத்து இம்ரான் கானை சந்தித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் பாகிஸ்தானில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாடு முடிந்த உடன், இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என ராணுவ தளபதி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே அரசுக்கு எதிராக உள்ள அதிருப்தி எம்பிக்கள் 24 பேரும் மீண்டும் கட்சிக்கு திரும்பினால் இரக்கமுள்ள தந்தை போன்று அவர்களை மன்னிப்பதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.