உலகம்

உயிர்பிரியும் வரை சீனாவை ஆள அதிபர் ’ஷி ஜின்பிங்’ திட்டம்!?

webteam

வாழும் வரை சீனாவின் தலைமைப்பதவியை வகிக்கும் முயற்சியை அதிபர் ஷி ஜின்பிங் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வார கால மாநாடு பெய்ஜிங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த கூட்டத்தில் நாட்டையும் கட்சியையும் வழிநடத்தும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இதில் சேர்மன் எனப்படும் தலைவர் அந்தஸ்தை அடைய ஷி ஜின்பிங் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் இதுவரை வேறு யாரும் எட்டாத அந்த அந்தஸ்தை அடைய ஷி ஜின்பிங் திட்டமிட்டுள்ளதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.