ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயப்போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் ட்ரம்ப் உரையாற்றினார். அதில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வரை ஓயப்போவதில்லை என தெரிவித்தார். சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் வடகொரியாவிடமிருந்து அமெரிக்க மக்களை காக்க அந்நாட்டுக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்படும் என ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார். அணு ஆயுத ஏவுகணைகளை பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தி வரும் வடகொரியாவின் திட்டம் விரைவில் முறியடிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்கா மக்களின் நன்மைக்காக குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் இணைந்து செயல்படவேண்டும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.