உலகம்

இலங்கையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

webteam

இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 350-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் சூழல் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் அதிபர் சிறிசேன தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடரக்கூடும் என அஞ்சப்படுவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.