உலகம்

'ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்' - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

'ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்' - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

JustinDurai

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்று இரவு கொல்லப்பட்டதாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷியை போர்க்களத்தில் இருந்து அகற்றியுள்ளோம்'' என்று கூறியுள்ளார்.