உலகம்

‘வன உயிர்களை பாதுகாப்போம்... மனித குலத்தை காப்போம்’ - ப்ரீத்தி ஜிந்தா ட்வீட்.

subramani

உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி பாலிவுட் நடிகை ப்ரீதி ஜிந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்தொன்றினை பதிவிட்டுள்ளார்.

அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3’ஆம் தேதி உலக வனவிலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்நாளில் வன உயிர்களை பாதுகாப்பது தொடர்பாகவும் உணவுச் சங்கிலியில் வன உயிர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும் பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பாக ட்விட் செய்துள்ள பாலிவுட் நடிகை ப்ரீதி ஜிந்தா “இயற்கை நமக்கு சொந்தமானது அல்ல. நாம் இயற்கையை சார்ந்து வாழ்கிறோம். வன உயிர்களை பாதுகாப்பதென்பது ரொம்பவே அவசியம். வனவிலங்குகளை பாதுகாப்பதென்பது மனித குலத்தையும் இந்த பூமியையும் பாதுகாப்பதேயாகும்.” எனக் கூறியுள்ளார்.

உலகளவில் அழிவின் விளிம்பில் 14 வன உயிரினங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் நமக்கு நன்கு பரிட்சயனாம தேனீக்கள், யானைகள் ஆகியவையும் கூட இருப்பது கவலையளிக்கிறது. வன உயிர்களை பாதுகாப்பதும் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டியதும் நம் ஒவ்வொருவரின் கடமை என இந்நாளில் உறுதியேற்போம்.