உலகம்

99 மில்லியன் ஆண்டுகள் பழமையான வேட்டையாடும் ’நரக எறும்புகளின்’ புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

Sinekadhara

ஆகஸ்ட் 6ஆம் தேதி 'கரண்ட் பயாலஜி’ என்ற இதழில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகளில் நியூ ஜெர்ஸி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சீன அறிவியல் அகாடமி மற்றும் பிரான்ஸில் உள்ள ரென்னிஸ் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 99 மில்லியன் ஆண்டுகள் பழமையான பூச்சியின் புதைபடிவம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த வேட்டையாடும் ‘நரக எறும்பு’ (ஹைடோமெர்மெசின்) ஒன்று, அழிந்துபோன கரப்பான் பூச்சி இனமான கபுடோராப்டர் எலிகன்ஸ் என்ற பூச்சியை வேட்டையாடும் படிவம் அது.

மியான்மரின் பூட்டப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிவம், வரலாற்றுக்கு முந்தைய எறும்பு இனமான செரடோமிர்மெக்ஸ் எலன்பெர்கெரி பற்றிய விரிவான தகவல்களை நமக்கு வழங்குகிறது. மேலும் இதுபோன்ற கொலைகார எறும்புகள் தங்கள் எதிரிகலை எவ்வாறு தாக்கியது என்பதைக் காட்டும் ஆதாரம் இது. தங்கள் உணவுகளை கையாளும் யுக்தி மற்றும் அதன் கொடிய அரிவாள் போன்ற பிடிகள் இந்த படிவத்தில் தெளிவாக உள்ளது.

இந்த புதைபடிவமானது பண்டைய எறும்பின் உருவ அமைப்பையும், அதன் பரிணாம விளக்கத்தையும் தெளிவாகக் கொடுக்கிறது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரேட்டேசியஸ் - பேலியோஜீன் அழிவின் போது சுற்றுச்சூழல் மாற்றத்தால் இந்த நரக எறும்புகளின் பரம்பரையும் மறைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதுபோன்ற வேட்டையாடும் புதை படிவங்கள் கிடைப்பது அரிது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு முதல் நரக எறும்பு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்த எறும்புகள் முற்றிலும் வேறுபட்டுள்ளது புதிராக உள்ளது. அவற்றின் பரிணாம வளர்ச்சியின் தெளிவான படம் இன்னும் கிடைக்கவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.