ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் web
உலகம்

நிலநடுக்கம்| 800 பேர் உயிரிழப்பு.. 2,500 பேர் படுகாயம்! உருக்குலைந்த ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800 பேர் உயிரிழந்த நிலையில், 2,500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

PT WEB

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800 பேர் உயிரிழந்தனர். 2,500 பேர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் சிக்கல் தொடர்ந்து வருகிறது.

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சந்தித்துள்ள ஆப்கானிஸ்தானில், மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜலாலாபாத் அருகே 6 ரிக்டர் அளவில், 8 கிலோ மீட்டர் ஆழத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800ஆக அதிகரித்துள்ளது. 2ஆயிரத்து 500 பேர் காயமடைந்தநிலையில், பலி எண்ணிக்கை மேலும்உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பெரும் சேதத்தைசந்தித்துள்ள குணார் பகுதியை அடைவதே மீட்புக்குழுவினருக்கு பெரும்சவாலாக இருப்பதாக சுகாதாரத் துறைசெய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கரடுமுரடான மற்றும் செங்குத்தானநிலப்பரப்பில் நிலநடுக்கத்தின் பாதிப்புஅதிகமாக உள்ளதென்றும், சாலைகள்துண்டிக்கப்பட்டதால் மீட்புக் குழுவினர்செல்ல கடினமாக இருப்பதாகவும்குறிப்பிட்டுள்ளார். குணார் பகுதிகளில்செல்போன் சேவையும் சரிவரஇயங்காததால், பாதிப்பு குறித்து முழுவிவரங்களை பெற முடியாத சூழல்உள்ளது என்றும் ஆப்கன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.