கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ் தடுமாறி வாகனத்தில் மோதியதால் காயமடைந்தார்.
போப் பிரான்சிஸ் அவருக்கென உள்ள பிரத்யேக வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நிலைதடுமாறி, வாகனத்தின் மீது மோதினார். இதில் இடது கண் அருகே அவருக்கு காயம் ஏற்ப்பட்டது. உடனடியாக ஐஸ் கட்டி மூலம் அந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கார்டாகனா பகுதியில் 5 லட்சம் மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் போப் பிரான்ஸிஸ் உரையாற்றினார். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், ரோம் திரும்பிய போப் பிரான்சிஸை கொலம்பிய மக்கள் கோலாகலமாக அனுப்பி வைத்தனர்.