உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற போப்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரார்த்தனையில் பங்கேற்ற போப்

rajakannan

கத்தோலிக்கக் கிறித்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் முதன்முறையாக இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார். அபுதாபி சென்ற அவரை மன்னர் ஷேக் முகம்மது பின் ஜையத் அல் நஹ்யான் வரவேற்றார். 

துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனையிலும், மதநல்லிணக்கக்கூட்டத்திலும் போப் பங்கேற்றார். இதில், சுமார் 1,35,000 கத்தோலிக்குகள் கலந்து கொண்டனர்.

போப் செல்லுமிடங்களெல்லாம் அவருக்கு பலத்த வரவேற்பும், பாதுகாப்பும் அளிக்கப்பட்டன. கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள், ஏமன், சிரியா, லிபியா மற்றும் ஈராக்கில் நடைபெற்று வரும் போர்கள் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். 

ஐக்கிய அரபு அமீரகத்துடனான சகோதரத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போப் ஆண்டவரும் கிராண்ட் இமாமும் கையெழுத்திட்டனர். இறுதியில், மூன்று நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு போப் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார்.