கைபேசி பயன்படுத்துவதை போல் பைபிளையும் பயன்படுத்த வேண்டும் என இளைஞர்களுக்கு போப் ஃபிரான்சிஸ் அறிவுரை கூறியுள்ளார்.
கைப்பேசியில் குறுஞ்செய்தி படிப்பது போல் இறைவனின் அருள் வாக்கையும் படிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். வாடிகன் நகர் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலிருந்து கொட்டும் மழையில் கூடியிருந்த மக்களிடம் பேசுகையில் போப் ஃபிரான்சிஸ் இதனை தெரிவித்தார். பைபிள் படிப்பதன் மூலம் இன்றைய தலைமுறையினர் முரண்பாடான விஷயங்களின் தூண்டுதலில் இருந்து தங்களை தடுத்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தினார். கைப்பேசி அளவாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ள போப் ஃபிரான்சிஸ் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டியவர். இன்டர்நெட், சமூகவலைதளங்கள் போன்றவற்றை கடவுளின் பரிசு என வர்ணித்தவர்.