model image Google gemeni
உலகம்

இந்திய பணக்காரர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் அமெரிக்க ஏழைகள்.. ஆய்வில் வெளியான முக்கியத் தகவல்!

அதேநேரத்தில், பணக்கார நாடுகளில் ஏழைகளுக்கான வருமானம் அதிகமாகத் தெரிந்தாலும், அந்நாடுகளில் வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash J

இந்தியாவின் மேல்மட்டத்தில் உள்ள 10% பணக்காரர்களின் தினசரி வருமான வரம்பைவிட, அமெரிக்கா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் கடைக்கோடியில் உள்ள 10% ஏழைகளின் தினசரி வருமானம் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நடப்பாண்டு உலக வங்கி வெளியிட்ட வறுமை மற்றும் சமத்துவமின்மை தரவுகளின்படி (Poverty and Inequality Platform),இந்திய பணக்காரர்கள் $10 சம்பாதிக்கும் நிலையில் (இந்திய மதிப்பில் ₹840), அமெரிக்காவின் ஏழைகள் $25 ( ₹2,100)சம்பாதிக்கின்றனர். அதேபோல் ஆஸ்திரேலியா & ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஏழைகள் $28 (₹2,350)சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் கனடாவைச் சேர்ந்த ஏழைகள் $31 (₹2,600)சம்பாதிக்கின்றனர்.

Model image

வளர்ந்த நாடுகளின் மொத்தப் பொருளாதாரம் மற்றும் தனிநபர் மொத்த தேசிய உற்பத்தி மிக அதிகம். இதனால் அந்நாடுகளின் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ளவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் வாழ்வாதார உதவிகளும் ஒப்பீட்டளவில் உயர்ந்து காணப்படுகின்றன.

மேலும், வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் உற்பத்தித்திறன், தொழிற்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியம் வளர்ந்து வரும் நாடுகளை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் தரவுகள் குடும்பங்களின் நுகர்வுச் செலவை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், பெரும்பாலான பணக்கார நாடுகளின் தரவுகள் நேரடி வருமானத்தை அடிப்படையாகக் கொண்டவை.

Model image

சேமிப்பு போக எஞ்சிய நுகர்வுச் செலவு வருமானத்தைவிடக் குறைவாகவே இருக்கும். இதன் காரணமாகவே இந்த ஒப்பீடு உயர்ந்து காணப்படுகிறது. அதேநேரத்தில், பணக்கார நாடுகளில் ஏழைகளுக்கான வருமானம் அதிகமாகத் தெரிந்தாலும், அந்நாடுகளில் வீட்டு வாடகை, மருத்துவச் செலவு, உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.