உலகம்

ஹேண்ட்ஸம் ’சிகோ’ - நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்

ஹேண்ட்ஸம் ’சிகோ’ - நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்

Sinekadhara

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆரஞ்சு கவுண்டி ஷெரிப்பின் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்துள்ள இவரின் புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்துவருகின்றனர். சிகோ என்று பெயரிடப்பட்ட நாய் படையில் சேரும்போது முழு சீருடையில் கேமிராவுக்கு போஸ் கொடுத்துள்ளதைத்தான் பலரும் ரசித்துவருகின்றனர்.

பொதுவாக மனிதர்களை பணியில் நியமிக்கும்போதுதான் இதுபோன்று புகைப்படம் எடுக்கப்படும். ஆனால் சிகோவை புகைப்படம் எடுக்கும்போது நேரடியாக கேமிராவை உற்றுப்பார்க்கிறார். சீருடை, பேட்ஜ், டை என அட்டகாசமாக இருக்கிறார் சிகோ.

K-9 Chico posed for his new ID badge today. He even wore a tie for the photo.Posted by  href="https://www.facebook.com/OrangeCoSheriff/
"
>Orange County Sheriff's Office, Florida on  href="https://www.facebook.com/OrangeCoSheriff/posts/3427163060695992">Thursday, 22 October 2020

சிகோவின் புகைப்படத்தை ஆரஞ்சு கவுண்டி ஷெரிப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ’கே-9 சிகோ, தனது புதிய ஐடியில் இன்று போஸ் கொடுத்துள்ளார். புகைப்படத்திற்காக டை கூட அணிந்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை 9,200 பேர் பகிர்ந்துள்ளனர், 6 ஆயிரம்பேர் லைக் செய்துள்ளனர் மற்றும் 1,400 கமெண்டுகளையும் பெற்றுள்ளது. நிறையப்பேர் சிகோவை ‘ஹேண்ட்ஸம்’ என்று குறிப்பிட்டுள்ளதுடன், இந்த புகைப்படத்தை வெளியிட்டதற்காக ஷெரிஃப் துறையைப் பாராட்டியுள்ளனர்.