உலகம்

‘எவ்வ்வ்வ்ளோ நீளம்’ - காரில் பதுங்கிய பாம்பை லாவகமாக பிடித்த போலீஸ்

rajakannan

சீனாவின் மினிவான் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒருவர் போன் செய்துள்ளார். போன் செய்தவர் தன்னுடைய காரில் பாம்பு ஒன்று இருப்பதாகவும், அதனை வெளியே எடுக்க வேண்டும் என்று கோரினார். உடனடியாக போலீசார் அந்த இடத்திற்கு சென்றனர். காரில் உள்ள ஸ்டியரிங் முன்பாக அந்தப் பாம்பு பதுங்கி இருந்தது. போலீஸ் ஒருவர் அதனை லாவகமாக கம்பியின் துணைக் கொண்டு பிடித்தார். கையில் உறை அணிந்திருந்த அந்த போலீஸ் பாம்பின் தலையை பிடித்து வெளியே எடுத்தார்.

பாம்பை வெளியே எடுத்தால் அது ஆள் உயரத்திற்கு மேல் பயங்கரமாக இருந்துள்ளது. 9 அடி நீளமுள்ள அந்தப் பாம்பினை போலீசார் தான் எடுத்து வந்த வலைக்குள் அடைத்தார்.  பின்னர் அந்தப் பாம்பு வனவிலங்கு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னன் மகாணத்தின் யோங்கிரினில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீஸ் பாம்பினை லாவகமாக பிடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.