பிரிட்டனில் உள்ள ராயல் வனவிலங்கு பூங்காவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக பனிக்கரடி ஒன்று குட்டியை ஈன்றுள்ளது.
பிரிட்டனின் கின்கிரேங் பகுதியில் உள்ள ராயல் வனவிலங்கு பூங்காவில் விக்டோரியா எனப்படும் பெண் பனிக்கரடி உள்ளது. இந்தக் கரடி கடந்த சில தினங்களுக்கு முன் பெண் கரடி ஒன்றை ஈன்றுள்ளது. அந்தக் குட்டியின் எடையை அதிகரிக்க மார்ச் மாதம் வரை கூண்டிலேயே பராமரிக்கப்படும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு பிரிட்டனின் தீம் பூங்காவில் பனிக்கரடி இரட்டை குட்டிகளை ஈன்ற நிலையில், தற்போது பெண் குட்டி பிறந்துள்ளது.