அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கை குலுக்குவது மீண்டும் ஒரு முறை விவாதப் பொருளாகி இருக்கிறது. இம்முறை ட்ரம்பே ஏமாற்றத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
போலந்து தலைநகர் வார்சா சென்றிருந்த ட்ரம்புக்கு அந்நாட்டு அதிபர் டூடாவும் அவரது மனைவியும் வரவேற்பு அளித்தனர். அப்போது டூடாவுடன் கைகுலுக்கிய ட்ரம்ப், அவரது மனைவி அகதாவை நோக்கி கை நீட்டினார். ஆனால் அதைக் கவனிக்காத அகதா, ட்ரம்பின் மனைவியை நோக்கிச் சென்றுவிட்டார். அப்போது ட்ரம்பின் முகத்தில் ஏமாற்றத்தைப் பார்க்க முடிந்தது.
முன்னதாக, இஸ்ரேல் விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப் தனது மனைவியின் கையை பிடிக்க முயன்றார். ஆனால், மீடியாக்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் கையை அவரது மனைவி தள்ளிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கேலிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.