உலகம்

பிரதமர் மோடிக்கு போலாந்து சிறுமி உருக்கமான கடிதம்

பிரதமர் மோடிக்கு போலாந்து சிறுமி உருக்கமான கடிதம்

webteam

இந்தியாவிற்கு வர உதவும்படி போலந்து நாட்டின் 11 வயது சிறுமி பிரதமர் மோடிக்கு உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார். 

போலந்து நாட்டை சேர்ந்த 11 வயது சிறுமி அலிக்ஜா வனாட்கோ. இவர் தனது தாய் மார்தா கோட்லார்ஸ்கா கோவா மாநிலத்தில் தங்கி, அங்குள்ள உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். விசா காலம் முடிந்த பின்னரும் தங்கி இருந்ததாக தாய் மார்தா கோட்லார்ஸ்கா நாடு கடத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து சிறுமியை அழைத்து செல்வதற்காக தாய்க்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி சிறுமி தனது தாயுடன் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். 

இந்நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதை தொடர்ந்து சிறுமி அலிக்ஜா வனாட்கோ, மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தான் கோவாவில் உள்ள தனது பள்ளியை நேசிப்பதாகவும், விலங்கு மீட்பு மையத்தில் தான் செய்து வந்த தன்னார்வத் தொண்டு சேவையை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், தாயுடன் கேதார்நாத் உள்ளிட்ட கோயிலுக்கு சென்ற அனுபவத்தையும் குறிப்பிட்டுள்ளார். தங்களின் விசா கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கும் அச்சிறுமி கடிதம் எழுதி உள்ளார்.