உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தார் பிரதமர் மோடி!

webteam

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்று‌‌ள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்‌‌ டொனால்ட் டிரம்பை சந்தித்தார். 

ஜப்பானின் ஒசாகா நகரில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா கட்டாயமாகக் குறைக்க வேண்டும் என டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது. 

இதுதவிர, பாதுகாப்புத்துறை, 5ஜி சேவை, ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த விவகாரம் உள்ளிட் டவை குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.‌ அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இணைந்தால் ஆங்கில வார்த்தையில் ஜெய் என வரும் என்றும் அது வெற்றியை குறிக்கும் என்றும் புகழ்ந்தார்.