மலேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் மகாதீரை சந்தித்து தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டனர்.
இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் என மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவதாக இன்று மலேசியா சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் மகாதீரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் இது குறித்து ட்விட்டரில் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, சிறப்பான வரவேற்பு அளித்த மலேசிய பிரதமர் மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும், அவருடனான சந்திப்பு மிகுந்த ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். பின்னர் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.