உலகம்

இதுலயும் மோடி தான் டாப்

இதுலயும் மோடி தான் டாப்

webteam

சர்வதேச அளவில் ஃபேஸ்புக்கில் அதிக பேர் ஃபாலோ செய்யும் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். சுமார் 4 கோடிக்கும் அதிகமானோர் ஃபேஸ்புக்கில் மோடியை பின் தொடர்கிறார்கள்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி உலகளவில் உள்ள முக்கிய தலைவர்களில் பிரதமர் மோடியைத் தான் அதிகம் பேர் பின் தொடர்கின்றனர் என தெரியவந்துள்ளது. 

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சுமார் 2 கோடிக்கு அதிகாமானோரே பின்தொடர்கின்றனர். இந்த சாதனையில் அவரை முறியடித்துள்ளார் மோடி. கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார் மோடி. அப்போது ஃபேஸ்புக்கில் அவரை பின்தொடர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி தான். ஆனால் தற்போது மோடியை 4,13,86,406 பேர் பின்தொடர்கின்றனர். சுற்றுப்பயணம் சுற்றியே பின்தொடர்வோரை அதிகப்படுத்தியுள்ளார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஃபேஸ்புக் பக்கங்களில் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய பக்கங்களும் அதிக லைக்குகளைப் பெற்றுள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.