வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதும் ஒருவித மனநோய் தான் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
வீடியோ கேம் விளையாட்டை நிறுத்தவே கூடாது என்ற மனநிலை ஏற்படுவதே இதன் முதல் அறிகுறி என கூறியுள்ள அவர், உலகெங்கிலும் உள்ள வல்லுனர்களுடன் கலந்தாலோசித்த பிறகே உலக சுகாதார நிறுவனம், வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாவதை மனநோய் பட்டியலில் சேர்த்திருப்பதாக கூறினார்.
குறிப்பிட்ட மக்களே இதுபோன்ற பிரச்னைகளுக்கு ஆளாவதாக கூறிய அவர், முன்கூட்டியே இதனை கண்டறிந்தால் சரிசெய்துவிடலாம் என தெரிவித்தார். இளைஞர்களும் பதின்ம வயதினருமே அதிக அளவில் வீடியோ கேம்களுக்கு அடிமையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 கோடி மக்கள் ஏதேனும் ஒரு வகையில் செல்போனிலோ அல்லது வேறு வழிகளிலோ வீடியோ கேம் விளையாடுகின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.