உலகம்

அழிவின் விளிம்பில் பூமி - கிரீன் பீஸ் எச்சரிக்கை

webteam

மனித நடமாட்டமே இல்லாத அண்டார்டிகா பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தென்படுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

அழிவின் விளிம்பில் பூமி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அண்டார்டிகாவின் எல்லைப் பகுதியில் GREEN PEACE என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கார் டயர், பிளாஸ்டிக் பை போன்றவற்றின் நுண்பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை GREEN PEACE குழுவில் உள்ள நுண் அறிவியலாளர்கள் சேகரித்துள்ளனர். 17 வகையான மாதிரி தண்ணீரை சேகரித்த அவர்கள் ஒன்பது மாதிரிகளில் நுண்பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். 

அவற்றில் PFA எனப்படும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். அண்டார்டிகா பகுதியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தென்படுவதால் உலக அளவில் மாசின் அளவு உயர்ந்திருப்பதாக GREEN PEACE ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.