இத்தாலியில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் உறைந்திருக்கும் பனி இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுவரையில் அப்பகுதியில் காணப்படாத பாசி பனியில் படந்திருப்பதே அந்த மாற்றத்திற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர்.
கோடை மற்றும் வசந்த காலத்தில் ஆல்ப்ஸில் 'தர்பூசணி பனி' படந்திருப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு அதன் வளர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஆல்ப்ஸ் மலையில் உறைந்திருக்கும் பனி இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிளமிடோமோனாஸ் நிவாலிஸ் என்ற பாசியே பனியின் நிறத்தை மாற்றுவதற்கு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது எனவும் குறைந்த பனிப்பொழிவு மற்றும் அதிக வளிமண்டல வெப்பநிலை ஆகியவை பாசிகள் வளர காரணமாக உள்ளது எனவும் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின் ஆராய்ச்சியாளர் பியாஜியோ டி மவுரோ கூறியுள்ளார். மேலும், பாசிகள் பூப்பது பனிப்பாறைகளுக்கு மிகவும் மோசமானது எனவும் இது பனி வேகமாக உருகுவதற்கு காரணமாய் அமைகிறது எனவும் தெரிவிக்கிறார்.
முன்னதாக, மவுரா சுவிட்சர்லாந்தில் மோர்டெராட்ச் பனிப்பாறை படிப்பை படித்தார். அங்கே அன்சிலோனெமா நோர்டென்ஸ்கியோல்டி என்ற பாசியால், பனி ஊதா நிறமாக மாறியுள்ளது. இந்த வகையான பாசிகள் கிரீன்லாந்து, ஆண்டிஸ் மற்றும் இமயமலைகளில் காணப்படுகின்றன. காலநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பனிப்பாறைகள் உருக காரணமாக அமைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் 10 சதவீதம் சுருங்கிவிட்டதாக 2019 ஆம் ஆண்டு ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது.