’டீ குடிக்கக் கூட பிளைட்ல போக போலிருக்கே’ என்று கிண்டலாகச் சொல்வதுண்டு. ஆனால், அதை உண்மையாக்கி இருக்கிறார் சிட்னி விமானி ஒருவர்.
ஹெலிகாப்டரில் பறந்துகொண்டிருந்த போது பசி எடுத்ததால், தான் ஓட்டிவந்த ஹெலிகாப்டரை மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் வெளியே பார்க் செய்துவிட்டு பார்சலோடு வந்து வண்டியில் ஏறியிருக்கிறார் அந்த சிட்னி விமானி. உணவகத்தில் இருந்து உணவுப் பொட்டலத்தோடு அவர் வெளியே வருவது காட்சியாக பதிவாகியுள்ளது. உணவகத்தின் வெளியே ஹெலிகாப்டர் நிற்பதைக் கண்டு அப்பகுதியில் உள்ளவர்கள் ஏதோ அசம்பாவித சம்பவம் நடந்துள்ளதாகக் கருதியுள்ளனர். ஆனால் அந்த விமானி சர்வசாதாரணமாக உணவை வாங்கிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலியப் விமானப் போக்குவரத்து ஆணையம் விசாரித்து வருகிறது.