latam  airlines
latam airlines latam airlines twitter
உலகம்

விமானத்தின் கழிவறையில் மயங்கி விழுந்த பைலட்: அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டபோதும் சோக முடிவு!

Prakash J

மியாமியில் இருந்து சிலி நோக்கி, கடந்த 13ஆம் தேதி LA505 என்ற எண் கொண்ட LATAM என்ற விமானம் 271 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. அப்போது பைலட் இவான் ஆண்ட்ரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பாத்ரூமுக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்தார்.

latam airlines

இதையடுத்து விமானம் உடனடியாக பனாமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய மருத்துவக் குழுவினர் வந்து பைலட்டை பரிசோதனை செய்தனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 25 ஆண்டு அனுபவம் வாய்ந்த பைலட் மறைவுக்கு விமான நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவ்விமான நிறுவனம், "அவருடைய இறப்பால், நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். எங்கள் பணியாளரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய 25 ஆண்டுகால உழைப்புக்காக, சிறந்த பங்களிப்பிற்காக நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். பாதிக்கப்பட்ட விமானியின் உயிரைப் பாதுகாக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன" என் அது தெரிவித்துள்ளது.

latam airlines

விமானி இறந்ததையடுத்து, விமானம் பனாமா சிட்டி விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், கடந்த 15ஆம் தேதி சிலி நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது.