உலகம்

குட்டியுடன் சிங்கம் என்ன பேசியிருக்கும்!! - யூகிக்கும் நெட்டிசன்கள்!! வைரலான புகைப்படம்

குட்டியுடன் சிங்கம் என்ன பேசியிருக்கும்!! - யூகிக்கும் நெட்டிசன்கள்!! வைரலான புகைப்படம்

Sinekadhara

விலங்குகளின் புகைப்படங்கள் மற்றும் அவற்றின் சேட்டைகள், ஆக்ரோஷங்களை வெளிப்படுத்தும் வீடியோக்களை நாம்மை பெரிதும் கவர்ந்துவிடுகிறது. அதைப் புரிந்துகொண்ட சமூக வலைதள வாசிகள், வனத்துறை, காட்டுயிர் ஆர்வலர்கள் அவ்வப்போது போட்டோக்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு நம்மை உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் வெள்ளிக்கிழமை, இந்திய வன சேவை அதிகாரி சேர்ந்த பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் ஒரு சிங்கம் தனது குட்டியுடன் இருக்கும் அழகான தருணத்தை பகிர்ந்துகொள்கிறது. அந்த படத்தில் அதிகாரி கஸ்வான் தாயும் குட்டியும் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகிக்கச் சொல்லியிருந்தார். அதனுடன் வருகிற பத்தாம் தேதி உலக சிங்கங்கள் தினத்தை சேர்ந்து கொண்டாடுங்கள் என #worldlionday2020 (sic) என்ற ஹேஷ்டேக்கையும் கொடுத்திருந்தார்.

உண்மையில் அம்மா சிங்கம் தனது குட்டியிடம் என்ன சொல்கிறது என நெட்டிசன்கள் யூகித்து ட்வீட் செய்து வருகின்றனர். அதில், ‘ அன்பு மகனே, உனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை வாழ்ந்துகாட்டு’, ’2020தும் கடந்து போகும்’, ‘வளரவேண்டாம் குழந்தையே’ என்பது போன்ற பல ட்வீட்களை செய்துவருகின்றனர்.