உலகம்

19 மாடி கட்டடத்தில் திடீர் தீ: ’ஸ்பைடர்மேன்’ ஆன இளைஞர்!

19 மாடி கட்டடத்தில் திடீர் தீ: ’ஸ்பைடர்மேன்’ ஆன இளைஞர்!

webteam

அமெரிக்காவின் ஃபிலாடெல்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து உயிர் தப்ப, 19 மாடி கட்டடத்தில் இருந்து ஒருவர் ஸ்பைடர்மேன் போல் கீழே இறங்கியது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

ஃபிலாடெல்பியாவில் உள்ள 19 மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால், அருகில் இருந்த மற்ற பகுதிகளுக்குத் தீ வேகமாக பரவியது. தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் கட்டடத்தில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டன. 

அப்போது தீ விபத்தில் இருந்து உயிர் தப்பும் நோக்கில், 19 மாடி கட்டடத்தையும் ஜன்னல் வழியாக பிடித்தபடி ஒருவர் கீழே இறங்கிய காட்சியை கண்டு காவல்துறையினர் திடுக்கிட்டனர். எனினும், அந்த நபர் சிறிதும் அச்சமின்றி, ஸ்பைடர்மேன் போல, ஒவ்வொரு தளத்தில் இருந்தும் கீழே குதித்து உயிர் தப்பினார். நல்வாய்ப்பாக இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.