உலகம்

VIRAL VIDEO: நாற்காலி ஆர்டர் செய்த மாணவர்..ரத்த மாதிரி குப்பியும் டெலிவரி ஆனதால் அதிர்ச்சி

JananiGovindhan

ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள், உணவுகள் பலவும் டெலிவரி செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள் தொடர்ந்து நடந்தேறி வருகிறது.

அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் டெலிவரி ஆகும் வரை வாடிக்கையாளர்கள் தங்களது நாடித்துடிப்பை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல்தான் தற்போது நிகழ்கிறது. அந்த அளவுக்கு பேக்கேஜிங்கிலும், டெலிவரி செய்வதிலும் எக்கச்சக்கமான சிக்கல்கள் ஏற்படுகிறது.

அந்தவகையில், அமெரிக்காவின் பி.எச்டி ஆராய்ச்சியாளரான ஜென் பெகாகிஸ் என்ற பெண் ஒருவர் தோலால் செய்யப்பட்ட நாற்காலி ஒன்றினை அமேசான் மூலம் ஆர்டர் செய்திருக்கிறார்.

வீடியோ காண: Twitter.com

ஆனால் அவருக்கு அந்த நாற்காலியோடு ரத்தம் நிரப்பப்பட்ட குப்பியும் இணைத்து டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜென், “அமேசான் நிறுவனத்தில் இருந்து நான் ஆர்டர் செய்த தோல் நாற்காலியுடன், ரத்த மாதிரி நிரப்பிய குப்பியையும் அனுப்பியிருக்கிறார்கள் என்று சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? இதனைக் கண்டு எனக்கு வார்த்தைகளே வரவில்லை” என தனது ட்விட்டரில் குறிப்பிட்டு, டெலிவரி செய்யப்பட்ட ரத்த மாதிரியை வீடியோ எடுத்தும் பதிவிட்டிருள்ளார்.

அந்த வீடியோவை கிட்டத்தட்ட ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டதோடு, தங்களுக்கு நிகழ்ந்த சில டெலிவரி சம்பவங்களையும் பதிவிட்டிருக்கிறார்கள்.

ALSO READ: