கொரோனாவை கட்டுப்படுத்த சுமார் 212 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் 48 மருந்துகள் மூன்றாம் கட்ட சோதனை முயற்சியை எட்டியுள்ளன. சில நாடுகளில் அவசர கால தேவையை உணர்ந்து அந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டறிய ஆர்வம் காட்டி வரும் Pfizer தடுப்பு மருந்து, கொரோனவை தடுக்க 95.8% பயனளிப்பதாக தெரிவித்துள்ளது இஸ்ரேல் சுகாதார அமைச்சகம்.
கடுமையான நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க 99.2 சதவிகிதம் Pfizer உதவுகிறது எனத் தெரிவித்துள்ளது இஸ்ரேல். அதேபோல 98.9 சதவிகிதம் உயிரிழப்புகளை தடுப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதை அந்த மருந்து செலுத்தப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் தெரிவித்துள்ளது இஸ்ரேல்.
Pfizer மருந்தை அமெரிக்காவின் பார்மா நிறுவனமான Pfizer, ஜெர்மனி பார்மா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் 4.25 மில்லியன் மக்களுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.